சென்னையை குளிரவைத்த மழை! பூந்தமல்லிதான் டாப்!!

 

சென்னையை குளிரவைத்த மழை! பூந்தமல்லிதான் டாப்!!

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடும் சூழ்நிலையில் 24 மாவட்டங்கள் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்படதுடன் தண்ணீர் இல்லாமல் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். போர்கால அடிப்படையில் அரசும் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் தண்ணீர் பிரச்னையை தீர்க்க முயற்சித்து வருகிறது. இந்நிலையில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும், மழை பொழியவும், தண்ணீர் பஞ்சத்தை போக்கவும் அரசு யாகங்களையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.&

இந்நிலையில் காலையில் இருந்தே மேகமூட்டமாக இருந்த நிலையில் இன்று மாலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை,கிண்டி, பூந்த மல்லி, செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம், சோளிங்கநல்லூர், நுங்கம்பாக்கம், போரூர், கோடம்பாக்கம், சூளைமேடு, வடபழனி, தியாகராயநகர், கோயம்பேடு, அண்ணாநகர், மதுரவாயல் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. 

இன்று மாலை பெய்த மழையின் அளவின் படி, பூந்தமல்லியில் 49 மில்லி மீட்டரும், கிண்டியில் 32 மில்லிமீட்டரும், செம்பரம்பாக்கத்தில் 32 மில்லி மீட்டரும் நுங்கம்பாக்கத்தில் 31 மில்லி மீட்டரும் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது.