சென்னையில் 2 காவலர்களுக்கு கொரோனா: மூடப்பட்ட நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்!

 

சென்னையில் 2 காவலர்களுக்கு கொரோனா: மூடப்பட்ட நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்!

உயிரிழந்தோர் எண்ணிக்கை 886 லிருந்து 934 ஆகவும் அதிகரித்துள்ளது. அதே சமயம் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6,362 லிருந்து 6,869 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை தாண்டியது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,380 லிருந்து 29,435 ஆகவும்,  உயிரிழந்தோர் எண்ணிக்கை 886 லிருந்து 934 ஆகவும் அதிகரித்துள்ளது. அதே சமயம் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6,362 லிருந்து 6,869 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் மேலும் 52பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1937 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் முடங்க போயுள்ளனர். ஆனால் இந்த இக்கட்டான சூழலிலும் போலீசார், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என பலரும் களம்கண்டு உழைத்து வருகிறார்கள். இதில் போலீசார், மருத்துவர்கள் என பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. 

tt

அந்த வகையில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமைக் காவலருக்கு மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டது.  இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் அவர்  ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைப்போல, நுங்கம்பாக்கம் உளவுத்துறை காவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 

rr

இரு காவலர்களுக்கு  கொரோனா இருப்பது தெரியவந்துள்ளதால் அந்த காவல் நிலையத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த காவல்நிலையம் தற்போது பூட்டப்பட்டு கிருமி நாசினி தெளிக்கபட்டுள்ளது. இதையடுத்து அங்கு பணிபுரியும் காவலர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. 

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, உதவி ஆணையர் அலுவலகம் ஆகியவை இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.