சென்னையில் விடிய விடிய சாப்பிட சில இடங்கள்… புத்தாண்டு ஸ்பெஷல்

 

சென்னையில் விடிய விடிய சாப்பிட சில இடங்கள்… புத்தாண்டு ஸ்பெஷல்

இன்றைய தினம் சென்னையில் வீட்டை விட்டு வெளியே போய் புத்தாண்டை கொட்டாடப் போகிறீர்களா? அரசு ஒரு மணிக்கு மேல் கொண்டாட்டங்கள் இருக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறது.அப்போது கிளம்பினாலும் சரி லேட்டா கிளம்பினாலும் சரி,அர்த்த ராத்திரியில் சாப்பாடு கிடைக்காமல் ரோடு ரோடாக அலைய வேண்டி இருக்கும்.புத்தாண்டு அதுவுமா எதுக்கு பட்டினியா படுக்கணும்.அதனால் சென்னையில் விடிய விடிய சில குட்டி ஹோட்டல்கள் தொடங்கி ஸ்டார் ஹோட்டல் வரை திறந்திருக்கும். எங்க போனால் என்ன சாப்பிடலாம் என்ற லிஸ்ட் இதோ..

newyear

ஹோட்டல் மத்சயா

dosa

எழும்பூர் தமிழ் சாலையில் ( ஹால்ஸ் ரோடு ) இருக்கிறது .இது ஒரு 100% உடுப்பி ஹோட்டல், தாபன ஹரே பென்ன தோசா, மைசூர் மசால் தோசா,நீர் தோசா போன்ற கர்நாடக சிற்றுண்டி வகைகளுக்கு புகழ் பெற்றது.இரவு 2 மணி வரை திறந்திருக்கும்.

திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி

food

87/3 வர்ணா டவர்ஸ். பார்டர் தோட்டம்.திருவல்லிக்கேணி.மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி வகைகள். சிக்கன் 65 ஆகியவை கிடைக்கும். அதிகாலை 2 மணிவரை திறந்திருக்கும்.

புகார் ஹோட்டல்.

buhar

3/17 அண்ணா சாலை.
சிக்கன் 65 ஐ கண்டுபிடித்த உணவகம்.பிரியாணி வகைகள்,புரோட்டா வகைகள். மட்டன் சாப்ஸ்,பாயா,ஆம்லெட் வகைகள் உண்டு.இரவு 2 மணிவரை திறந்திருக்கும்.

ஆட்டோ பிரியாணி.

auto

இரண்டு இடங்களில் இயங்குகிறது.
ஒ.எம்.ஆரில் இருக்கும் நன்மங்கலம்,பெருமாள் நகர்.

வேளச்சேரி ரயில் நிலையம் அருகில்.இந்திரா நகர்.7 வது தெரு.இரண்டு இடங்களிலும் சூடான மட்டன் , சிக்கன்,பீஃப் பிரியாணி,காடை,சிக்கன் 65 கிடைக்கும்.இரவு 3 மணிக்கு துவங்கி விடியும்வரை.

மாமா மெட்ராஸ் மஜா

shawarma

111-முதல் தெரு,சாந்தி காலணி,அண்ணா நகர்.சிக்கன் பிரியாணி, ஸ்வர்மா,பணீர் டிக்கா,ஃபிரைட்.ரைஸ் வகைகள். தயிர் சாதம் கிடைக்கும்.
அதிகாலை 3 மணிவரை திறந்திருக்கும்.

நியூ ஆந்திரா மீல்ஸ்

mess

102/ 42 தியாகராசர் சாலை,பாண்டிபஜார்.ஆந்திரா மீல்ஸ்,பருப்புப்பொடி, பச்சடிகள்,பப்பு,மோர்குழம்பு உட்பட அனைத்தும் கிடைக்கும்,கூடாவே,குண்டூர் சிக்கன்.அதிகாலை 2 மணிவரை திறந்திருக்கும்.

சேட்டா மோர்

9-4 கிரீம்ஸ் ரோடு,ஆயிரம் விளக்கு.( முருகேசன் காம்ப்ளக்ஸ்)

buttermilk

தரமான ஜில் மோர்,இஞ்சி,வேர்கடலை,பூந்தி,கறிவேப்பிலை சேர்த்த சேட்டன் மோருக்கு சென்னையின் ராக்கோழிகள் எல்லோரும் ரசிகர்கள்.இரவு 9 மணிக்கே வியாபாரம் துவங்கிவிடும்.கொஞ்சம் சீக்கிரம் போனால் மொறு மொறு சமோசாவும்,பப்ஸ்களும் கூட கிடைக்கும்.