சென்னையில் மைனஸ் 3 டிகிரி கடுங்குளிரில் கொத்து கொத்தாக மக்கள் செத்தது உங்களுக்கு தெரியுமா!?

 

சென்னையில் மைனஸ் 3 டிகிரி கடுங்குளிரில் கொத்து கொத்தாக மக்கள் செத்தது உங்களுக்கு தெரியுமா!?

சென்னையில் வெயிலின் அளவு எகிறியடிக்கிறதை கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்!இதே சென்னையில் ஒருமுறை,மைனஸ் 3 டிகிரி குளிர் கொண்டெடுத்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா!?

சென்னையில் வெயிலின் அளவு எகிறியடிக்கிறதை கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்!இதே சென்னையில் ஒருமுறை,மைனஸ் 3 டிகிரி குளிர் கொண்டெடுத்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா!?

‘அட…போங்க பாஸு,ஏப்ரல் மாசம் முடியப்போகுது…இப்பப்போயி ஏப்ரல் ஃபூல் பண்ணிக்கிட்டு’ என்று உங்க மனசாட்சி கொந்தளிப்பது கேட்கிறது! உண்மையாகவே அப்படியொரு பருவநிலை சென்னையில் இருந்திருக்கிறது என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள ஒரு ஃபிளாஷ் பேக் போவோம்.

winter

சரியாக 204 வருடங்களுக்கு முன் 1815-ம் வருடம் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில்தான் அந்த பயங்கர குளிர் வாரம் வந்திருக்கிறது.அது சென்னையை மட்டும் பாதித்த குளிரல்ல அந்த ஏப்ரல் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை உலகமே குளிரில் நடுங்கியது…மொத்தம்  80,000 பேர் இறந்து போனார்கள்.

winter

சென்னை அல்லது இந்தியாவில் செத்தது பற்றி அன்றைய கிழக்கிந்திய கம்பெனி ரெக்கார்டுகளில் ஒரு தகவலும் இல்லை.இதற்கு காரணம், இந்தோனேசிய தீவுக்கூட்டத்தில் இருக்கும் ‘டம்போரா’ என்கிற எரிமலை கக்கிய தீக்குழம்பும்,அது வெளியிட்ட சாம்பலும் தான் இந்த கோடை இல்லாத ஆண்டை உருவாக்கின.

எரிமலை வெடிப்பு என்றால் சாதாரண வெடிப்பல்ல,ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீசிய அணு குண்டு 0.2 டன் டி.என்.டி சக்தியுள்ளது!டம்போரா எரிமலை 1815 ஏப்ரல் 10ம் தேதி வெடித்தபோது வெளிப்பட்ட சக்தி 800 டன் டி.என்.டி என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

winter

வான் வெளியில் ஐந்து மைல் உயரத்திற்கு லாவா குழம்பையும் சாம்பலையும் வீசி இருக்கிறது டம்போரா எரிமலை வெடிப்பு! அப்போது வெளிப்பட்ட சாம்பலும்,சல்ஃபர்,குளோரின்,ஃபுளோரைட் போன்ற வாயுக்களும் பூமியை ஒரு போர்வை போல மூடிக்கொண்டதால் சூரிய வெப்பம் பூமியை அணுக முடியாமல் போய்விட்டது!நல்ல வேளை அப்போது விமானம் கண்டு பிடிக்கப்படவில்லை.இல்லாவிட்டால் ஆயிரக்கணக்கான விமானங்கள் விபத்துக்குள்ளாகி அழிந்து இருக்கும்.

winter

1815 ஏப்ரல் 24 ம் தேதி ஒரு திங்கட்கிழமை.அன்றே சென்னையின் வெப்பநிலை 11 டிகிரியாக குறந்துவிட்டது.அடுத்த மூன்றுநாட்களில்,அதாவது ஏப்ரல் 28 ம் தேதி சென்னையின் வெப்பநிலை மைனஸ் மூன்று செல்ஸியசாக வீழ்ச்சி அடைந்து விட்டது.அன்று பனிப்பொழிவு இருந்ததாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் உண்டு!

winter

ஏப்ரல் 10 ம் தேதி வெடித்த எரிமலையின் சாம்பலும்,அது வெளியிட்ட வாயுக்களும் வளிமண்டலத்தில் பயணித்து சென்னைக்கு வர 14 நாட்கள் ஆகி இருக்கின்றன.வெளிநாட்டு வனிகத்துக்கு உதவிய ‘வியாபாரக் காற்று’தான் இந்த எரிமலை கழிவுகளையும் சென்னைக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. இவ்வளவு பெரிய எரிமலை வெடிப்பு ஏற்பட்டிருக்கும் போது கண்டிப்பாக சுனாமியும் தோன்றி இருக்கும்!ஆனால்,அதுபற்றிய பதிவேதும் கிடைக்கவில்லை.அந்த வருடம் முழுவதும் இந்திய துணைக்கண்டத்தில் மழையே பெய்யவில்லை.அதனால் ஏற்பட்ட பஞ்சத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு மேல் இருக்கும்.

winter

ஆகஸ்ட் 1815-ல் தான் எரிமலை வெடிப்புக்கு பிறகு ஜாவாவில் இருந்து புறப்பட்ட ‘ கேத்தரினா’ என்கிற கப்பல் சென்னை வந்து சேர்ந்தது.அன்று சென்னையில் இருந்து வந்து கொண்டிருந்த ‘தி மெட்ராஸ் கூரியர்’ என்கிற பத்திரிகையின் செய்தியாளர்,கேத்தரினா கப்பல் கேப்டனை சந்தித்து அவரது அனுபவத்தை பதிவி செய்திருக்கிறார். 

winter

அந்த மாலுமி தான் மூட்டைகட்டிக் கொண்டு வந்த எரிமலை சாம்பலை, துறைமுக அதிகாரிகளிடம் கொடுத்திருக்கிறார்.அது ஆய்வுக்காக கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டது.ஆனால்,எரிமலை வெடிப்புக்கும்,எதிர் பாராத குளிருக்கும் தொடர்பு இருக்குமா என்று,அன்று யாருக்குமே தோன்றவில்லை. 

rain

சரி,இப்ப எதுக்கு இந்த ஃபிளாஸ் பேக் என்கிறீர்களா…? இருங்க ப்ரோ,இவ்வளவு பெரிய  தகவலைச் சொல்லிட்டு,அதைச் சொல்லாமல் இருப்பமா…’அவ்வளவு பெரிய பனிப்பொழிவையே தாங்கிய சென்னை ‘ஃபனி’ புயலை தாங்காதா!’

இதையும் வாசிக்க: அய்யய்யோ… அதுமட்டும் நடந்தே விடக்கூடாது… 60 ஆண்டுகளுக்குப் பிறகு பதறித் துடிக்கும் தமிழகம்..!