சென்னையில் நிலவும் மூடுபனி பொங்கல் திருநாள் வரை நீடிக்கும் !

 

சென்னையில் நிலவும் மூடுபனி பொங்கல் திருநாள் வரை நீடிக்கும் !

மார்கழி மாதம் என்பதால் இரவு நேரத்தில் கடும் குளிர் நிலவுவது இயற்கை தான். ஆனால், கடந்த 2 நாட்களாகச் சென்னையில் கடும் மூடுபனி நிலவி வருகிறது.

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் பருவமழை முடிவடைந்ததைத் தொடர்ந்து, மழை குறைந்துள்ளது. மார்கழி மாதம் என்பதால் இரவு நேரத்தில் கடும் குளிர் நிலவுவது இயற்கை தான். ஆனால், கடந்த 2 நாட்களாகச் சென்னையில் கடும் மூடுபனி நிலவி வருகிறது.

ttnj

சாலையில் செல்லும் போது வழியை மறைக்கும் அளவிற்கு மூடுபனி ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மூடுபனி காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 4 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. 

ttn

இது குறித்து சென்னை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ‘வங்கக்கடலில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் காற்றின் வலு குறைந்துள்ளது. காற்று நிலப்பகுதியில் இருந்து மேலே செல்ல செல்ல வெப்பநிலை குறைவது இயற்கை தான். ஆனால், இப்போது நிலப்பகுதியில் இருந்து 600 மீட்டர் உயரம் வெப்பநிலை உயர்ந்தும், மேல் வளிமண்டலத்தில் வெப்பநிலை குறைந்தும் நிலவுகிறது. 

ttn

இந்த வெப்பநிலை முரண் காரணமாகத் தமிழகத்தில் பனிப்பொழிவும் மூடுபனியும் ஏற்படும். சாலைகளில் வாகனங்கள் ஓட்ட முடியாத சூழல் ஏற்படும். சூரிய உதயத்துக்குப் பிறகு பனி விலகிவிடும். இது இந்த காலகட்டத்தில் ஏற்படும் வழக்கமான நிகழ்வுதான். இது வரும் பொங்கல் திருநாள் வரை நீடிக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.