சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியும் ஆய்வகம்.. அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் !

 

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியும் ஆய்வகம்.. அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் !

சீன நாட்டில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீன நாட்டில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கொடிய வகை நோய் பரவும் தன்மை கொண்டதால் அண்டை நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டது. அதனால், சீனாவில் இருந்து சென்னை வரும் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 

ttn

இந்நிலையில் சென்னை – ராஜா அண்ணாமலைபுரம், எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு முகாமை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ” சீனா உள்ளிட்ட நாடுகளில்  கொரோனா வைரஸ் இருப்பதாக அறிவிக்கப்பட்ட உடனே தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் சீனாவிலிருந்து தமிழகம் வந்த அனைவரும் அவர்களது வீட்டிலேயே கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் யாருக்கும்  கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்தார். 

ttn

மேலும்,  கொரோனா வைரஸ் பற்றி மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் புனேவை அடுத்து சென்னையில்  கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியும் ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.