சென்னையில் கொரோனா தொற்று அதிகரிப்பு! கவனமாக இருக்க மாநகராட்சி அறிவுறுத்தல்!

 

சென்னையில் கொரோனா தொற்று அதிகரிப்பு! கவனமாக இருக்க மாநகராட்சி அறிவுறுத்தல்!

சென்னையில் பரவலாக கொரோனா   தொற்று காணப்படுகிறது. சிலருக்கு தொற்று எப்படி வந்தது என்பதை கண்டறிய முடியாததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மயிலாப்பூர் அமில்டன் பாலம் அருகில் உள்ள மீனாம்பாள் புரத்தில் அடுத்தடுத்த வீடுகளில் உள்ள 12 பேருக்கு தொற்று ஏற்பட்டு அனைவரும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, மந்தைவெளியில்  பிரபலமான சுரேஷ் ஸ்டோர் குடும்பத்தினர் 3 பேருக்கு  தொற்று ஏற்பட்டுள்ளது. நான்குநாட்கள் முழு ஊரடங்கிற்கு  முன்பு வரை இந்த கடையில், நீண்ட  வரிசையில் நின்று பொதுமக்கள் பொருட்கள் வாங்கினர். இந்த கடை நிர்வாகிகள் மூலம் எத்தனை பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

coronavirus

சென்னை நகரம் முழுவதும்  வீடு வீடாக சென்று உணவு  வழங்கி வந்த ஊழியர் ஒருவருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டு அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்படி சென்னை நகரம் முழுவதும் பரவலாக தொற்று உள்ளது. சென்னை மாநகர மக்கள் மிகவும் கவனமுடன் இருக்கவும், தங்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கவும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. 

இதனால் சென்னையில் கொரோனா பரிசோதனையை 2 ஆயிரம் வரை அதிகரித்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களைதான் தற்போது பரிசோதனை செய்துள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது சென்னையில் மக்கள் அதிகம். இதுவரை 22,000 பேருக்கு சோதனை முடிந்துள்ளது. இந்தியாவிலேயே சென்னையில் இறப்பு விகிதம் 1.8% ஆக உள்ளது. இது குறைவுதான் என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.