சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும்!

 

சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும்!

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் 407 அம்மா உணவகங்களும் மற்ற இடங்களில்  247 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் 407 அம்மா உணவகங்களும் மற்ற இடங்களில்  247 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகிறது. இங்கு மிகக்குறைந்த விலையில் வழங்கப்பட்டு வரும் உணவுகள், ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு பேருதவியாக அமைகின்றன. இதனால் சில மாவட்டங்களில் அதிமுக அரசு சார்பில் இலவச அம்மா உணவு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து, அரசே இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

ttn

இந்நிலையில், சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருக்கிறார். ஊரடங்கில் மக்களுக்கு வாழ்வாதாரமாக அமையும் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு அளிக்க பல நன்கொடையாளர்கள் நிதி வழங்கியிருப்பதால், இலவசமாக உணவு வழங்கப்படும் என்றும் மக்களுக்கு 3 வேளையும் இலவச உணவு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், உணவு சாப்பிட வருபவர்களின் இடம், பெயர், தொலைபேசி எண் உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொண்டு உணவு தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.