சென்னையில் உணவு விநியோகம் செய்த ஊழியருக்கு கொரோனா – கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதி

 

சென்னையில் உணவு விநியோகம் செய்த ஊழியருக்கு கொரோனா – கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதி

சென்னையில் உணவு விநியோகம் செய்த ஊழியருக்கு கொரோனா – கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சென்னையில் உணவு விநியோகம் செய்த ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று நோயால் இதுவரை தமிழகத்தில் 25 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 2058 பேர் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 1128 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும்பாலும் சாலைகளில் உணவு விநியோகம் செய்யும் நபர்களையே அதிகமாக காண முடிகிறது. அவர்கள் மூலமாகவும் கொரோனா பரவல் நிகழ வாய்ப்பிருப்பதாக சமூக வலைதளங்களில் சிலர் குரல் எழுப்பி வருகின்றனர்.

ttn

இந்த நிலையில், சென்னையில் உணவு பொருட்களை வீட்டுக்கு வந்து விநியோகம் செய்யும் தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 26 வயது கொண்ட அந்த இளைஞர் தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவர் அண்மையில் 130 பேருக்கு உணவு பொட்டலங்களை விநியோகம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அந்த 130 பேரையும் கண்டறியும் பணியில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.