சென்னையில் இறைச்சிக் கடை வைத்திருப்பவருக்கு கொரோனா தொற்று உறுதி.. பீதியில் சென்னை வாசிகள்!

 

சென்னையில் இறைச்சிக் கடை வைத்திருப்பவருக்கு கொரோனா தொற்று உறுதி.. பீதியில் சென்னை வாசிகள்!

இவ்வாறு சென்னையில் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. 

தமிழகத்தில் அதிகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1000ஐ நெருங்கி வரும் நிலையில், சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அதிகமாக மக்கள் சென்று வரும் இடமான கோயம்பேடு மார்க்கெட்டில் முதற்கட்டமாக 4 பேருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் வியாபாரிகள் என்பதால் அவர்களுடன் தொடர்பில் இருந்து மேலும் 3 பேருக்கு கொரோனா பரவியது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வியாபாரிகளிடம் இருந்து சுமார் 38 பேருக்கு கொரோனா பரவியதாக தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு சென்னையில் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. 

ttn

இந்நிலையில், சென்னை ஈக்காட்டுத்தாங்கல் அம்பாள் நகரில் இறைச்சிக் கடை வைத்திருப்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருமளவு வியாபாரிகளுக்கே கொரோனா தொற்று பரவுவது, சென்னை வாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபருக்கு அவரிடம் கறி வாங்கிச்சென்றவர்கள் மூலமாக கொரோனா பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.