சென்னையில் இருந்து வெளியூர் செல்ல அவசர பாஸ் இன்று முதல் வழங்கப்படும்- மாநகராட்சி ஆணையர்!

 

சென்னையில் இருந்து வெளியூர் செல்ல அவசர பாஸ் இன்று முதல் வழங்கப்படும்- மாநகராட்சி ஆணையர்!

தமிழகத்தில் நேற்று 161 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 138 பேர். ஒட்டுமொத்த அளவில் 2,323பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “ முழு ஊரடங்கால் கடந்த 4 நாட்களாக முழு ஊரடங்கால் அவசர பாஸ் வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டது. சென்னையில் இருந்து வெளியூர் செல்ல அவசர பாஸ் இன்று முதல் வழங்கப்படும். சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

ஆய்வு

விலைவாசிகளை கட்டுப்படுத்தும் வண்ணமும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையில் விலைவாசிகளை ஏற்றி வைத்து விற்றால் ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். சென்னையில் 98% பேர் எந்தவித அறிகுறியும் இல்லாமல் தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் நோய்த்தொற்று  பரவாமல் தடுக்க நேரக்கட்டுப்பாட்டை பின்பற்றாமல் இருந்த 350 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளை திறக்க அடுத்த 3 மாதங்களுக்கு அனுமதி இல்லை. 1900 தள்ளுவண்டிகள் மற்றும் 1182 மினி ட்ரக்குகள் மூலம் மாநகராட்சி முழுவதும் காய்கறி விநியோகம் நடக்கிறது. இதுவரை 114 மெட்ரிக் டன் காய்கறி தொகுப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பாதுக்காப்பு நலன் கருதி கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.  அத்தியாவசிய உணவு பொருட்களான காய்கறி, பழங்கள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகளுக்கு கூட நேரக்கட்டுபாடு விதிக்கப்பட்டது.கு றிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகள் மற்றும் ஊரடங்கு விதிகளை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்திருந்தது” என தெரிவித்தார்.