சென்னையில் இன்று முதல் அனைத்து தனிக் கடைகளும் இயங்கலாம்: ஆனால் ஒரு கண்டிஷன்!

 

சென்னையில் இன்று முதல் அனைத்து தனிக் கடைகளும்  இயங்கலாம்: ஆனால் ஒரு கண்டிஷன்!

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3550லிருந்து 4058 ஆக உயா்ந்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில்  2008பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் இன்று முதல் தனிக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் பொதுமுடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  அதன்படி மே 17 ஆம் தேதி வரை  ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர்.  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3550லிருந்து 4058 ஆக உயா்ந்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில்  2008பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

rr

இந்நிலையில் சென்னையில் இன்று முதல் அனைத்து தனிக்கடைகளும்   இயங்கலாம் என்றும் ஏசி பொருத்தப்பட்ட கடைகள் செயல்படலாம், ஆனால் ஏசி-யை பயன்படுத்தக்கூடாது எனவும், ஏசி பயன்படுத்தவில்லை என்ற போஸ்டரை கடை முன் ஒட்ட வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

tttt

முன்னதாக சென்னையில் முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் தவிர அனைத்து தனிக் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.