சென்னையில் அடுத்த 5-6 நாட்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் – ராதாகிருஷ்ணன் தகவல்!

 

சென்னையில் அடுத்த 5-6 நாட்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் – ராதாகிருஷ்ணன் தகவல்!

வட சென்னையில் கூடுதலாக மருத்துவர்களை கொண்டு பரிசோதனை செய்து வருகிறோம்.

சென்னை ராயபுரத்தில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணனும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அதில். சென்னையில் அதிகரித்து வரும் கொரோனாவால் யாரும் பயப்பட தேவையில்லை என்றும் கொரோனா அதிகமாக பரவியுள்ள கோயம்பேடு மற்றும் வட சென்னையில் கூடுதலாக மருத்துவர்களை கொண்டு பரிசோதனை செய்து வருகிறோம் என்றும் தினமும் 3,500 பேரை சோதனைக்கு உட்படுத்துகிறோம் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

ttn

இதன் காரணமாக அடுத்த 5-6 நாட்களுக்கு கொரோனா பரவலின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் தமிழகத்தில் தான் அதிகமான பரிசோதனை மையங்கள் இருக்கும் நிலையில், சென்னையில் தான் அதிக பரிசோதனை நடப்பதாகவும் கூறினார். சென்னையில் பெருமளவு மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நீரிழிவு, ரத்த அழுத்தம், மூச்சுத்திணறல், சிறுநீரக நோயாளிகள் இருக்கும் இடங்களுக்கே சென்று பரிசோதனை செய்கிறோம் என்றும் தெரிவித்தார். 

ttn

கோயம்பேடு மூலமாகவே தற்போது அதிகமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், வடசென்னை, திருவான்மியூர்பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இனிமேல் கொரோனா பாதிப்பு ஏற்படும் இல்லம் மட்டுமே முடக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கண்ணுக்கு தெரியாத இந்த கொரோன வைரஸ் போரில் நாம் சிப்பாய்கள் போல செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.