சென்னையிலேயே பழைமையான பிரியாணி ஓட்டல் இதுதான்.

 

சென்னையிலேயே பழைமையான பிரியாணி ஓட்டல் இதுதான்.

சென்னை பூங்காநகர் என்கிற பார்க் டவுனில் ராசப்ப செட்டித் தெருவில் இருக்கும் இந்தச் சின்னன்சிறு உணவகத்தில் ஒரே சமையத்தில் நெருக்கி அடித்துக்கொண்டு அமர்ந்தால் எட்டுப் பேர் சாப்பிடலாம்.அவளவுதான் இடம்.ஆனால் நீங்கள் எப்போது போனாலும் நாலு பேர் வெளியே காத்திருப்பதைப் பார்க்கலாம்.

ஓட்டலின் பெயர் அன்று ‘கட்டையன் செட்டியார் மெஸ்’.இப்போது தலை முறைகள் மாறி ‘தஞ்சை மிலிட்டரி ஓட்டல்’ ஆகிவிட்டாலும், பழைய கட்டையன் செட்டியார் பெயரும் ஃபிளக்சில் இருக்கிறது.

thanjavur-military-hotel-90

சென்னை பூங்காநகர் என்கிற பார்க் டவுனில் ராசப்ப செட்டித் தெருவில் இருக்கும் இந்தச் சின்னன்சிறு உணவகத்தில் ஒரே சமையத்தில் நெருக்கி அடித்துக்கொண்டு அமர்ந்தால் எட்டுப் பேர் சாப்பிடலாம்.அவளவுதான் இடம்.ஆனால் நீங்கள் எப்போது போனாலும் நாலு பேர் வெளியே காத்திருப்பதைப் பார்க்கலாம்.

108 வருடம் முன்பு உணவகம் துவங்கிய காலத்தில் காலை 6 மணிக்கே பிரியாணி தயாராகிவிடுமாம்.அது பூக்கடைகள் இங்கே இருந்த காலம்.சென்னையின் சுற்றுபுற கிராமத்து விவசாயிகள் இரவே தங்களது தோட்டத்திலிருந்து பூக்களைப் பறித்து கூடைகளில் நிரப்பி, வண்டிகட்டிக்கொண்டு வந்து பூ கூடைகளை இறக்கும்போது மணி ஐந்துதான் ஆகி இருக்குமாம். இரவெல்லாம் வண்டியோட்டி வரும் அவர்களுக்காகத்தான் ஆறுமணிக்கே பிரியாணி தயார் செய்திருக்கிறார் கட்டையன் செட்டியார்.

biryani

இப்போது பூ மொத்த வியாபாரம் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மாற்றப்பட்டு விட்டதால் சற்று தாமதமாக எட்டுமணிக்கு பிரியாணி பரிமாறுகிறார்கள். சமையல் முறைகள் 108 வருடம் முந்தைய அதே வழியில்தான்.விறகு கேஸ் எல்லாம் கிடையாது, கறியடுப்புதான். சமையல் செய்ய செப்புப் பாத்திரங்கள். பரிமாற இலை, தண்ணீர்தர பித்தளை டம்ளர்கள்!.

thaih

காலை எட்டுமணிக்கு கடை திறந்தால் மட்டன் பிரியாணி,சிக்கன் தோசை, மட்டன் தோசை,எலும்புக் குழம்பு,சிக்கன் குருமா கிடைக்கிறது. பிற்பகல் மூன்றுமணி வரை சாப்பிடலாம். மூன்றுமணிக்கு கடையை அடைத்து விட்டு, மாலை ஆறுமணிக்குத் திறக்கிறார்கள்.மீண்டும் அதே மெனுதான்.இரவு 10 மணிவரை பரபரப்பாக வியாபாரம் நடக்கிறது. மதியமும்,இரவும் பிரியாணி பார்சல்களும் பறக்கின்றன. 

இந்த தஞ்சை மிலிட்டரி ஓட்டலில் இன்னொரு சிக்னேச்சர் டிஷ் ஆட்டுக்கால் பாயா, இது தினசரி மெனுவில் இல்லை!.புதன் மற்றும் ஞாயிறு மட்டுமே கிடைக்கிற பாயாவுக்கு ஐம்பது ஆண்டு ரசிகர்கள் எல்லாம் இருக்கிறார்கள். பெரும்பாலும் ஆட்டோக்காரர்களும் ஏழைத் தொழிலாளர்களும்தான் இவர்களது கஸ்டமர்கள், ஆனால்,அ வ்வப்போது தூரத்தில் காரை நிறுத்திவிட்டு வந்து பார்சல் வாங்கிப் போகும் வாடிக்கையாளர்களும் உண்டு.