சென்னைக்கு வந்த சீன நபருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி !

 

சென்னைக்கு வந்த சீன நபருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி !

சீனாவில் அதி வேகமாகப் பரவி வரும் கொரானா வைரஸ் இது வரை 300க்கும் மேற்பட்ட நபர்களை மரணமடையச் செய்துள்ளது.

சீனாவில் அதி வேகமாகப் பரவி வரும் கொரானா வைரஸ் இது வரை 300க்கும் மேற்பட்ட நபர்களை மரணமடையச் செய்துள்ளது. இது மனிதனுக்கு மனிதன் எளிதில் பரவுவதால், மக்களை இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாக்க முடியவில்லை. இந்த கொடிய வைரஸ் நோய், கொரியா, ஹாங்காங் உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனால் சீனாவில் அனைத்து போக்குவரத்து மற்றும் வான்வழி சேவை முடக்கப்பட்டுள்ளது.

ttn

அங்குக் கிட்டத்தட்ட 3000 ஆயிரம் பேருக்கு மேல் இந்த வைரஸ் தாக்குதலால் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அங்கிருக்கும் இந்தியர்களும் சீனர்களும் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். 

ttn

இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சீனாவிலிருந்து வரும் நபர்களுக்குத் தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் கேரளாவில் உள்ள நபருக்கும் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் சீனாவிலிருந்து திருவண்ணாமலை சென்ற நபருக்கும் வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ttn

இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த  லியோ விஜின் என்பவர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த போது அவருக்கு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, அந்த நபர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரை தனி வார்டில் அனுமதித்த மருத்துவர்கள், தீவிர சிகிச்சை சிகிச்சை அளித்து வருகின்றனர். 

ttn