சென்னைக்கு ரெட் அலர்ட்டா? – மாநகராட்சி ஆணையர் விளக்கம்

 

சென்னைக்கு ரெட் அலர்ட்டா? – மாநகராட்சி ஆணையர் விளக்கம்

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.

சென்னை மாநகராட்சி 

இதுதொடர்பாக மாநாகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா காரணமாக சென்னையில் ரெட் அலர்ட் எதுவும் விடுக்கப்படவில்லை. அதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம். சமூக விலகல் கடைபிடிக்காத நபர்களுக்கு கடை வைக்க அனுமதி மறுக்கப்படும்.  சமூக விலகல் கடைபிடிக்க வேண்டும் என தி.நகர் மார்க்கெட் விளையாட்டு திடலில் மாற்றப்பட்டுள்ளது. மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் சமூக விலகல் கடைபிடிப்பதில் சிக்கல் இருந்தது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் மக்களுக்கு ஏதுவாக தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் அமைந்திருக்கும் விளையாட்டு திடலில் மாற்றப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 14 ம் தேதி நடைமுறையில் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.