சென்னைக்கு ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் – பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை

சென்னைக்கு ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் – பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை

ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ஐந்தாவது முறையாக  பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை  மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். நாடு முழுவதும் மே 17-ஆம் தேதி ஊரடங்கு முடிவடைய உள்ளதால் அதை நீட்டிப்பது அல்லது அது தொடர்பான பல விஷயங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட்டது.

EPS

முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சிவப்பு மண்டலங்களில்  கடும் நடவடிக்கை எடுத்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் முதல்வர்களுக்கு மோடி அறிவுறுத்தினார். அப்போது கொரோனா தொற்று அதிகரிப்பதால் சென்னைக்கு மே.31 ஆம் தேதி வரை ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் என முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். மேலும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக உடனடியாக 2 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.