சென்செக்ஸ் 399 புள்ளிகள் வீழ்ச்சி! ரூ.2.74 லட்சம் கோடி நஷ்டம்! இதுதாங்க இந்த வார நிலைமை…..

 

சென்செக்ஸ் 399 புள்ளிகள் வீழ்ச்சி! ரூ.2.74 லட்சம் கோடி நஷ்டம்! இதுதாங்க இந்த வார நிலைமை…..

தொடர்ந்து இந்த வாரமும் இந்திய பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 399 புள்ளிகள் வீழ்ந்தது. முதலீட்டாளர்களின் பணம் ரூ.2.74 லட்சம் கோடி கரைந்தது.

கடந்த ஜூன் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் குறைந்தது, சில்லரை விலை பணவீக்கம் சிறிது உயர்ந்தாலும் அது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு இலக்குக்குள் இருந்தது. இன்போசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வாரத்தின் முதல் 3 நாட்கள் சிறப்பாக இருந்தது.

பங்குச் சந்தை

சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்தது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக அந்நாட்டில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஈரான்-அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் போன்ற வெளிநாட்டு செய்திகளாலும், சில இந்திய நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் திருப்திகரமாக இல்லாததாலும் வாரத்தின் கடைசி 2 வர்ததக தினங்களும் இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.

பங்கு வர்த்தகம்

நேற்று வர்த்தகம் முடிவடைந்த பிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.145.34 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்த பிறகு நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.148.08 லட்சம் கோடியாக உயர்ந்து இருந்தது. ஆக, இந்த வாரத்தில் முதலீட்டாளர்களுக்கு ரூ.2.74 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. 

இந்த வாரத்தில் ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 399.22 புள்ளிகள் குறைந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 134.80 புள்ளிகள் இறங்கியது.