செந்தில் பாலாஜி மட்டும் ஜெயிக்கட்டும்… அப்புறம் இருக்கு அரவக்குறிச்சியில் கச்சேரி…அதிமுக போடும் அசத்தல் ப்ளான்..!

செந்தில் பாலாஜி மட்டும் ஜெயிக்கட்டும்… அப்புறம் இருக்கு அரவக்குறிச்சியில் கச்சேரி…அதிமுக போடும் அசத்தல் ப்ளான்..!

நடைபெற்று வரும் நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கடும் டஃப் கொடுக்கும் தொகுதி அரவக்குறிச்சி. செந்தில் பாலாஜியின் தேர்தல் வியூகமும், பணபலமும் அதிமுகவையும், அமமுகவையும் கலங்கடித்து வருகிறது. இந்நிலையில் அங்கு செந்தில்பாலாஜி வெற்றி பெற்றால் அது செல்லாது என அறிவிக்கும் நிலையை உருவாக்க அதிமுக இன்றே அசத்தல் திட்டத்தை அரங்கேற்றி இருக்கிறது.

செந்தில் பால்

விஷயம் இதுதான்…  அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகுவிடம் அ.தி.மு.க. செய்தி பிரிவு ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பாபு முருகவேல் ஒரு புகார் மனு அளித்தார். அதில்,  ‘’அரவக்குறிச்சி தொகுதியில் தொட்டிக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் பகுதிகளில் வாக்காளர்களை திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஓட்டுப்போட விடாமல் தடுத்துள்ளார். இது நீதிக்கும், மனித உரிமைக்கும் எதிரானது. அப்பட்டமான தேர்தல் விதிமீறல்.

 செந்தில் பாலாஜி

எனவே செந்தில்பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஓட்டுப்போடவிடாமல் தடுக்கப்பட்ட வாக்காளர்களை மீட்டு அவர்கள் வாக்களிக்க செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இன்று இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்வதற்காக வாக்காளர்களுக்கு பிரியாணி தயார் செய்து வினியோகிக்க உள்ளனர். இதற்காக அதிக அளவில் இறைச்சி மற்றும் காய்கறிகள் வாங்கி தொகுதி தேர்தல் அலுவலகத்தில் வைத்துள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 50 ஆயிரம் பொட்டலங்கள் வினியோகிக்க உள்ளனர். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் அதிகாரிகள் உடனடியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார். செந்தில் பாலாஜி

ஒருவேளை செந்தில்பாலாஜி அவரக்குறிச்சியில் வெற்றி பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ள இந்த புகாரை வைத்து, வேட்பாளர் மீதே தவறு இருப்பதால் அந்தத் தொகுதியில் செந்தில் பாலாஜியின் வெற்றி செல்லாது எனக் கூறி மீண்டும் மறு தேர்தல் நடத்த அதிமுக வலியுறுத்தும். தேர்தல் ஆணையமும் ஒத்துழைத்தால் மீண்டும் அவரக்குறிச்சியில் தேர்தல் நடத்த சில மாதங்கள் பிடிக்கலாம். இதனை மனதில் வைத்தே அதிமுக முன்னெச்சரிக்கையாக செந்தில் பாலாஜி மீது இன்றே புகார் கொடுத்து துண்டை விரித்துள்ளதாகக் கூறுகிறார்கள் அரசியல் அறிந்தவர்கள்.