செஞ்சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வருக.. வருக என வரவேற்கிறோம்: முக ஸ்டாலின் அறிக்கை…

 

செஞ்சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வருக.. வருக என வரவேற்கிறோம்: முக ஸ்டாலின் அறிக்கை…

சீன நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பல்லவ மான்னர்களின் துறைமுகத்திற்கு அவர் வருகைத தருவது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும்  வரும் 11, 12 ஆம் தேதி இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தங்கள் குறித்த பேச்சு வார்த்தையை நடத்த மாமல்லபுரம் வரவிற்கின்றனர். இது குறித்து, திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகம் வரும் செஞ்ஜீன அதிபரை வருக வருக என வரவேற்கிறோம் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

MK Stalin

அதில் அவர், சீன நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பல்லவ மான்னர்களின் துறைமுகத்திற்கு அவர் வருகைத தருவது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. 1949  ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சி நடத்தி சீனாவை கைப்பற்றியது உலகையையே திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்வு. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான தொடர்பு இப்போது ஏற்பட்டதல்ல, காலம் காலமாக நடந்து வருகிறது. உலகம் உற்றுநோக்கி பாடம் கற்கத் தகுந்த சீன அதிபர் தமிழகம் வருவது, தமிழகத்துக்கு பெருமை சேர்க்கிறது என்று புகழ்ந்து கூறியுள்ளார்.

 

மேலும், சீன-இந்திய பேச்சு வார்த்தை நடத்த தமிழகத்தை தேர்வு செய்ததற்கு மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்ட அவர், தேசம் வேறு வேறு என்றாலும் வானம் ஒன்றே, எல்லைகள் பிரித்தாலும் எண்ணம் ஒன்றே, என்ற இந்த இரு நாட்டுக்கு இடையேயான பேச்சு வார்த்தை இரு நாடுகளுக்கு மட்டுமல்லாது, உலக சமுதாயதிற்கும் ஒளிதருவதாய் அமையட்டும், என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.