செக் மோசடி: நெப்போலியனுக்கு பிடிவாரன்ட்; உண்மை நிலவரம் என்ன?

 

செக் மோசடி: நெப்போலியனுக்கு பிடிவாரன்ட்; உண்மை நிலவரம் என்ன?

‘செக்’ மோசடி வழக்கில், நடிகர் நெப்போலியனுக்கு, ‘பிடிவாரன்ட்’ பிறப்பித்து, கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர்: ‘செக்’ மோசடி வழக்கில், நடிகர் நெப்போலியனுக்கு, ‘பிடிவாரன்ட்’ பிறப்பித்து, கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் 90களில் அறிமுகமான நடிகர் நெப்போலியன் தொடர்ந்து நடித்து வருகிறார். திரைத்துறை மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு அமைச்சராகவும் பதவி வகித்தார்.

இந்நிலையில் கரூரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், சில மாதங்களுக்கு முன், முத்துராமலிங்கம் என்ற படம் தயாரிக்க, சென்னையைச் சேர்ந்த, விஜய பிரகாஷ், ஆனந்த் ஆகியோருக்கு, 1.10 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளார். 

இதையடுத்து படப்பிடிப்பு நடந்த சமயத்தில் 6 லட்சம் ரூபாயை அவர்கள் திருப்பி செலுத்தினர். மீதியுள்ள 54 லட்சம் ரூபாயை தருவதாக, அந்த படத்தில் நடித்த நெப்போலியன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து படம் வெளிவந்த பின், 25 லட்சம் ரூபாயை மட்டும் நெப்போலியன் கொடுத்தார். மீதமுள்ள பணத்திற்கு, செக் வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பணம் இல்லாமல், செக் திருப்பியுள்ளது.

இதனால்  கரூர் குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில் கோபாலகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த  நீதிபதி ரகோத்தமன் இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பலமுறை  ‘சம்மன்’ அனுப்பியும், நெப்போலியன் ஆஜராகாததால், அவரை கைது செய்ய, பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

என்னதான் நடிகராக  இருந்தாலும் நெப்போலியனும்  அரசியல்வாதி இல்லையா அதனால் தான் ஜகா வாங்குறாருன்னு நெட்டிசன்ஸ் அவரை கலாய்ச்சி தள்ளுறாங்க!? இது உங்களுக்கு தேவையா?