செக்யூரிட்டி வீட்டில் 24 பவுன் நகை கொள்ளை!

செக்யூரிட்டி வீட்டில் 24 பவுன் நகை கொள்ளை!

தமிழகத்தில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் நிறுவி வந்தாலும், அவை குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த பிறகு குற்றவாளிகளை நெருங்குவதற்கு பயன்படுகின்றதே தவிர, குற்றச் செயல்களைத் தடுப்பதில் பங்கு வகிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டையும் பொதுமக்கள் முன் வைக்கின்றனர்

theft

கோவை, ராக்கிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (58). இவர் மனைவி பாரதி (51), மகன் ஜீவானந்தம் (31), மருமகள் சத்யபிரியா (26) ஆகியோருடன் வசித்து வருகிறார். அந்த பகுதியில் உள்ள வங்கியொன்றில் செக்யூரிட்டியாக வேலைப் பார்த்து வருகிறார். இவரது மகள் திருமணமாகி பெங்களுரூவில் வசித்து வருகிறார். இந்நிலையில், மனைவியுடன், தனது மகளைப் பார்க்க பெங்களூரூ சென்றுள்ளார். மகனும், மருமகளும் கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

theft

இந்நிலையில் காலையில், சிவராஜுன் வீடு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டுக்காரர் கணேசன் போன் மூலமாக சிவராஜுக்கு தகவல் சொல்லியிருக்கிறார். இதையடுத்து சிவராஜ்  விரைந்து வந்து பார்த்த போது, வீட்டின் முன் பக்க கதவுகள் உடைக்கப்பட்டு, வீட்டின் பீரோவில் வைத்திருந்த 24 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. பின்னர் இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.