சூர்யாவுக்கு குல்ஃபி ஊட்டி விடும் சாய் பல்லவி! வைரலாகும் புரோமோ வீடியோ

 

சூர்யாவுக்கு குல்ஃபி ஊட்டி விடும் சாய் பல்லவி! வைரலாகும் புரோமோ வீடியோ

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் ரொமாண்டிக் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் ரொமாண்டிக் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் என்.ஜி.கே.  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பாலா சிங், பொன்வண்ணன், உமா பத்மநாபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

அனல் பறக்கும் அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். நாளை வெளியாகவுள்ள படத்தின் முன்பதிவு தொடங்கி வசூல் சாதனை படைத்தது வருகிறது. 

இந்நிலையில், இப்படத்தின் ரொமாண்டிக் புரொமோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், சூர்யாவிற்கு, சாய் பல்லவி குல்ஃபி ஐஸ் ஊட்டிவிடும் ரொமான்ஸ் செய்வது போல் இடம்பெற்றுள்ளன. அந்த புரோமோ சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றனர்.