சூர்யாவின் கட் அவுட்டுக்கு பதில் 200 ஹெல்மெட்கள் வழங்கப்படும்! இதுவே உண்மையான காப்பான்… அசத்தும் சூர்யா ரசிகர்கள்!!

சூர்யாவின் கட் அவுட்டுக்கு பதில் 200 ஹெல்மெட்கள் வழங்கப்படும்! இதுவே உண்மையான காப்பான்… அசத்தும் சூர்யா ரசிகர்கள்!!

நெல்லை சட்டம்ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜூன்சரவணனின் கோரிக்கையை ஏற்று சூர்யாவின் புதிய திரைப்படம் வெளியாகும்போது பேனர், கட்அவுட்டுக்கு பதில் 200 ஹெல்மெட் வழங்கப்படும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

நெல்லை சட்டம்ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜூன்சரவணனின் கோரிக்கையை ஏற்று சூர்யாவின் புதிய திரைப்படம் வெளியாகும்போது பேனர், கட்அவுட்டுக்கு பதில் 200 ஹெல்மெட் வழங்கப்படும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

சென்னை பள்ளிகரணை அருகே சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் மேலே விழுந்ததால், இருசக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்த குரோம்பேட்டை, நெமிலிச்சேரியைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் கீழே விழுந்து லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து நடிகர் சூர்யா, “அனைத்து ஊர்களிலும் ரசிகர்கள் பேனர்கள் வைக்கக்கூடாது என்று தயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன். பேனர்கள் வைப்பதற்கு பதிலாக பள்ளிகளுக்கு உதவுங்கள்” என ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சூர்யா

இந்நிலையில் சூர்யாவின் புதிய திரைப்படம் வெளியாகும்போது பேனர், கட்அவுட்டுக்கு பதில் 200 ஹெல்மெட் வழங்கப்படும் என நெல்லை மாநகர சட்டம்ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் கோரிக்கை விடுத்தார். மேலும் பேனருக்கு பதில் ஹெல்மெட் வழங்கினால் அவர்களே உண்மையான காப்பான் என்றும் அர்ஜூன் சரவணன் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட ரசிகர்கள் ஹெல்மெட் வழங்க ஒத்துக்கொண்டனர்