சூர்யாவின் என்.ஜி. கே படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

சூர்யாவின் என்.ஜி. கே படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

என்.ஜி. கே திரைப்படத்தைச் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

சென்னை: என்.ஜி. கே திரைப்படத்தைச் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

செல்வராகவன் – சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் என்.ஜி.கே. எஸ் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. எஸ். ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். 

suriya

படத்தை பார்த்த ரசிகர்கள் கலையவையான விமர்சனத்தையே கூறிவருகின்றனர். இந்த நிலையில் படத்தின்  தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். அதில், அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் சட்ட விரோதமாக வெளியிடப்படுவதால், பண இழப்பும்,மன உளைச்சலுடன் ஏற்படுகிறது. 

ngk

இதனால் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆஷா, என்.ஜி.கே படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்துள்ளார்.