சூர்யாவிடம் மல்லுக்கட்டும் ஜோதிகா – கார்த்தி கூட்டணி!

 

சூர்யாவிடம் மல்லுக்கட்டும் ஜோதிகா – கார்த்தி  கூட்டணி!

 த்ரில்லர் படத்தில்  கார்த்தியும் ஜோதிகாவும்  அக்கா – தம்பியாக நடித்துள்ளனர்.

நடிகை ஜோதிகா – கார்த்தி நடித்துள்ள படமும், சூர்யாவின் சூரரை போற்று திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸாக  இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

karthi

‘கைதி’  படத்தை தொடர்ந்து  நடிகர் கார்த்தியும் அவரது அண்ணியான நடிகை ஜோதிகாவும் இணைந்து புதிய படத்தில்  நடித்து வருகின்றனர். பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகும் இந்த  த்ரில்லர் படத்தில்  கார்த்தியும் ஜோதிகாவும்  அக்கா – தம்பியாக நடித்துள்ளனர். இதனால் முதன்முறையாகத் திரையில் இவர்களைப் பார்க்க  ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் அன்சன் பால் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் துவங்கியது. 

suriya

இந்நிலையில் இப்படம் இறுதிக்கட்ட பணிகளை  எட்டியுள்ள நிலையில் படத்தை  வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியீடு படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்  வெளியாகியுள்ளது. அதேபோல் . சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா  நடித்துள்ள சூரரை போற்று படமும் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாக இருப்பதாகக் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படும் நிலையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.