சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசித்த கொரோனா வைரஸ் நோயாளி – வைரலாகும் புகைப்படம்

 

சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசித்த கொரோனா வைரஸ் நோயாளி – வைரலாகும் புகைப்படம்

கொரோனா வைரஸ் நோயாளியுடன் மருத்துவரும் இணைந்து சூரிய அஸ்தமனத்தை பார்த்த நிகழ்வின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படுகிறது.

வுகான்: கொரோனா வைரஸ் நோயாளியுடன் மருத்துவரும் இணைந்து சூரிய அஸ்தமனத்தை பார்த்த நிகழ்வின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படுகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 3042-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸால் 30 பேர் உயிரிழந்து உள்ளனர். அத்துடன் புதிதாக 143 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீனாவின் வுகானில் உள்ள யுனி மருத்துவமனையில் சுமார் 87 வயதான ஒரு நோயாளி தனது மருத்துவருடன் சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசித்த சுவாரஸ்யமான நிகழ்வு நடந்துள்ளது. நோயாளியை சிடி ஸ்கேன் செய்ய அழைத்துச் சென்றபோது “சூரிய அஸ்தமனத்தை ரசித்து பார்க்க விரும்புகிறீர்களா?” என்று நோயாளியிடம் மருத்துவர் கேட்டிருக்கிறார். அதற்கு நோயாளி சம்மதிக்கவே பின்னர் இருவரும் அந்த சூரிய அஸ்தமன தருணத்தை பார்த்து ரசித்தனர். இந்த நிகழ்வின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படுகிறது.