சூப்பர் ஸ்டார்-ஏ.ஆர்.முருகதாஸ் இணைவது அரசியல் படமா?

 

சூப்பர் ஸ்டார்-ஏ.ஆர்.முருகதாஸ் இணைவது அரசியல் படமா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கவுள்ளதாக கூறப்படும் திரைப்படம் அரசியல் சார்ந்த படம் இல்லை என கூறப்படுகிறது.

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கவுள்ளதாக கூறப்படும் திரைப்படம் அரசியல் சார்ந்த படம் இல்லை என கூறப்படுகிறது.

சர்கார்’ படத்தின் சர்ச்சைகளில் இருந்து ஒருவழியாக மீண்டு வந்துள்ள இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கப்போவதாக தகவல் வெளியானது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது அரசியலில் களமிறங்கியிருப்பதால், ஏ.ஆர்.முருகதாஸின் ’ரமணா’, ‘கத்தி’, ‘சர்கார்’ படங்களை போல் இந்த படமும் அரசியல் பின்னணியில் உருவாகவுள்ளதாக கூறப்பட்டன.

rajinikanth

ஆனால், இப்படம் ஒரு ஃபேன்டஸி திரைப்படமாக இருக்கும் என்று இயக்குநர் தரப்பில் கூறப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தின் கதையை சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கூறிவிட்டதாகவும், அவர் இன்னும் சம்மதம் கூறாததாகவும் தெரிகிறது. இதனிடையே இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யப்பவிருப்பதாகவும், லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பலமுறை கதை திருட்டு சர்ச்சையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சிக்கியதால், அவரது ஃபேன்டஸி கதைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓகே சொல்வாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.