சூப்பர் ஸ்டாரை கவர்ந்த யோகிபாபு: ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம் இது தான்?!

 

சூப்பர் ஸ்டாரை கவர்ந்த யோகிபாபு: ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம் இது தான்?!

நடிகர் யோகிபாபுவை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வியந்து பாராட்டியுள்ளார். 

மும்பை:  நடிகர் யோகிபாபுவை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வியந்து பாராட்டியுள்ளார். 

yogi babu

சின்னதிரை மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் யோகிபாபு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். குறிப்பாக அஜித், விஜய், சூர்யா ஆகியோருடன் நடித்துள்ள அவர் தனது கடின உழைப்பால் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தர்பாரில் இணைந்துள்ளார். தற்போது தர்பார் படப்பிடிப்பிற்காக நீண்ட நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதால், அவர் நடிப்பில் உருவாகியுள்ள தர்ம பிரபு, ‘A1’ ஆகிய படங்களின் டப்பிங் பணிகள் பாதிக்கப்பட்டதாகத்  தெரிகிறது.

rajini

இதன் காரணமாக இரண்டு படங்களின் டப்பிங் பணிகளையும் மும்பை மாற்றிய யோகி பாபு, தர்பார் படப்பிடிப்பு முடிந்தவுடன் டப்பிங் பணிகளில் ஈடுபட்டு அதனை வெற்றிகரமாக முடித்தும் கொடுத்துள்ளார். 

yogi babu

இந்நிலையில் யோகிபாபுவின் கடின உழைப்பை கண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரிடம், ;உங்களுடைய கடின உழைப்பும், தொழில் பக்தியும் உங்களை நிச்சயம் சினிமாத்துறையில் பெரிய ஆளாக கொண்டு செல்லும். உங்களை நினைத்து பெருமை அடைகிறேன்’  என்றும் கூறினாராம்.  மேலும் ‘தர்மபிரபு’ டீசரை பார்த்த ரஜினிகாந்த், இந்த படத்தை தான் பார்க்க மிகவும் ஆவலுடன் இருப்பதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.