சூப்பர் ஸ்டாரின் ‘2.0’ விரைவில் வெளியாகும்: தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்!

 

சூப்பர் ஸ்டாரின் ‘2.0’ விரைவில் வெளியாகும்: தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ திரைப்படமும் விரைவில் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ திரைப்படமும் விரைவில் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள ‘2.0’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படம் நவ.29ம் தேதில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘2.0’ திரைப்படத்தையும் திருட்டுத்தனமாக வெளியிடப்போவதாக தமிழ் ராக்கர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான ட்வீட்டில், ‘2.0 திரைப்படம் விரைவில் தமிழ் ராக்கர்ஸில் வெளியிடப்படும்’ என பகிரங்கமாக கூறியுள்ளது.

முன்னதாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ திரைப்படத்தின் ஹெச்டி பிரிண்ட் வெளியாகும் என்று தமிழ் ராக்கர்ஸ் அறிவித்தது போலவே, திரைப்படம் வெளியாவதற்கு முதல் நாளே இணையதளங்களில் லீக்காகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தமிழ் திரையுலகத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் பைரசியும், அதில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தையும் முடக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திற்கு பைரசி ஒரு சாபமாக இருப்பதாக தமிழ் திரையுலகினர் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.