சூப்பர் மாடல் டூ சூப்பர் மாம்: கஸ்தூரியைப் புகழ்ந்து தள்ளிய சாக்ஷி அகர்வால் 

 

சூப்பர் மாடல் டூ சூப்பர் மாம்: கஸ்தூரியைப் புகழ்ந்து தள்ளிய சாக்ஷி அகர்வால் 

பிக் பாஸ் சாக்ஷி அகர்வால் வைல்ட் கார்டு போட்டியாளர் கஸ்தூரியை புகழந்து தள்ளியுள்ளார். 

சென்னை: பிக் பாஸ் சாக்ஷி அகர்வால் வைல்ட் கார்டு போட்டியாளர் கஸ்தூரியை புகழந்து தள்ளியுள்ளார். 

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு சாக்ஷி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். கவினுடன் காதல், புறம் பேசுவது போன்ற செயல்களால் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேற்றப்பட்டார். 

மிகவும் சந்தோஷமாக வெளியேறிய சாக்ஷி, தனது சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடுவது அவர்களைச் சந்திப்பது என்று மிகவும் குஷியாக உள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக சென்ற கஸ்தூரி குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அதில், ‘சூப்பர் மாடல் டூ சூப்பர் மாம் என்று பதிவிட்டுள்ள சாக்ஷி, உங்கள் வார்த்தைகளிலிருந்து வாழ்க்கையில் நீங்கள் கண்ட போராட்டத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் பல பெண்களுக்கு உத்வேகமாக உள்ளீர்கள், அவர்களில் நானும் ஒருத்தி’ என்று பதிவிட்டுள்ளார்.