சூப்பர் புயலாக மாறிய ஆம்பன் – மேற்கு வங்கத்தின் 6 மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்திக்கும்

 

சூப்பர் புயலாக மாறிய ஆம்பன் – மேற்கு வங்கத்தின் 6 மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்திக்கும்

ஆம்பன் புயல் சூப்பர் புயலாக மாறியுள்ளது. இந்தப் புயலால் மேற்கு வங்கத்தின் 6 மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்திக்கும்.

கொல்கத்தா: ஆம்பன் புயல் சூப்பர் புயலாக மாறியுள்ளது. இந்தப் புயலால் மேற்கு வங்கத்தின் 6 மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்திக்கும்.

ஆம்பன் சூறாவளி சூப்பர் புயலாக மாறியுள்ளது. இது நாளை மாலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட இரண்டு கடலோர மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான பணிகளில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா அரசுகள் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

ttn

மேற்கு வங்காள மாநிலத்தில் வானிலை ஆய்வு மையம் “ஆரஞ்சு அலர்ட்” கொடுத்துள்ளது. ஆம்பன் புயலால் கொல்கத்தா, ஹூக்லி, ஹவுரா, தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானாக்கள் மற்றும் கிழக்கு மிட்னாபூர் ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். அம்மாநிலத்தின் ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பத்ராக் மற்றும் பாலசோர் ஆகிய பகுதிகள் குறிப்பாக மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய மழையால் கடும் சேதத்திற்கு உள்ளாகும் என்று கூறப்படுகிறது. ஆம்பன் புயலின் சேதத்தை உடனடியாக சரிசெய்வதற்காக இரு மாநிலங்களின் கரையோரப் பகுதிகளில் 37 தேசியப் பேரிடர் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.