சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற டெல்லி: ரசிகர்கள் உற்சாகம்!

 

சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற டெல்லி: ரசிகர்கள் உற்சாகம்!

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது. 

புதுடெல்லி: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது. 

கொல்கத்தா – டெல்லி மோதல் 

ipl

ஐபிஎல் 12வது சீசன் தொடங்கியது முதல் கிரிக்கெட் ரசிகர்களின் உற்சாகத்திற்கு அளவில்லாமல் உள்ளது. அந்த வகையில், டெல்லியில் நேற்று நடந்த 10வது  லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் டெல்லியில் நேற்று மோதின. டெல்லி அணி டாஸை வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

இலக்கை தீர்மானித்த கொல்கத்தா 

kolkata

இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய நாயக் மற்றும் கிரிஸ் லின் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அடுத்தடுத்து வந்த வீரர்களும் எதிர் அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் சோர்ந்த முகத்துடன் பெவிலியன் திருப்பினர். இதனால் சுதாரித்துக் கொண்ட கொல்கத்தா அணியின் கேட்பன் தினேஷ் கார்த்திக் நிதானமாக ஆடி 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாகக் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகளை இழந்து  185 ரன்கள் எடுத்தது.

சதத்தை தவறவிட்ட பிரித்வி ஷா 

prithvi

186 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு காமிறங்கிய  டெல்லி அணியின்  இளம் வீரர் பிரித்வி ஷா அதிரடியாக ஆடி பட்டையை கிளப்பினார். அவர் சதமடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தநிலையில், துரதஷ்டவசமாக ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டு, 99 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

இந்த சீசனின் முதல் சூப்பர்  ஓவர் 

prithvi

ஆனால் பிரித்வி ஷா தொடர்ந்து வந்த  டெல்லி அணி வீரர்கள் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறினர். இதையடுத்து கடைசி ஓவரில் வெற்றி பெற 6 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்ட டெல்லி அணி  5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தை சமனில் முடித்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இது ஐபிஎல் தொடரின் முதல் சூப்பர் ஓவராகும்.

டெல்லி அணி த்ரில் வெற்றி 

delhi capital

சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 10 ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தா அணியோ ஒரு விக்கெட்டை இழந்து 7 ரன்களை மட்டும் எடுத்தது. இதனால் டெல்லி அணி வெற்றியை தங்கள் வசமாக்கினர். 

இதையும் வாசிக்க:  ஜோதிடர் பேச்சை கேட்டு அடுத்தவர் மனைவிக்கு ஆசைப்பட்ட சரவணபவன் ராஜகோபால்: கொலை முதல் கைது வரை வழக்கு கடந்து வந்த பாதை!