சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட்! – வெளியானது ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது போஸ்டர்

 

சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட்! – வெளியானது ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது போஸ்டர்

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் பேட்டை திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.

சென்னை: ரஜினி நடிப்பில் உருவாகி வரும் பேட்டை திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம், பேட்டை. 

வளர்ந்து வரும் இளம் இயக்குநரான கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். அவர்களுடன் திரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். 

இப்படத்தின் முதல் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், தற்போது இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் கம்பீரமான மீசையுடன், வேட்டி சட்டையில் கிராமத்து இளைஞர் போன்று காட்சி தருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்த போஸ்டர் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.