சூடு பிடிக்கும் தமிழக தேர்தல் களம்: தி.மு.க – அ.தி.மு.க நேருக்கு நேர் மோதும் 8 தொகுதிகள்!

 

சூடு பிடிக்கும் தமிழக தேர்தல் களம்: தி.மு.க – அ.தி.மு.க நேருக்கு நேர் மோதும்  8 தொகுதிகள்!

மக்களவை தேர்தலில் அதிமுக – திமுக நேரடியாக  8 தொகுதிகளில் போட்டியிட உள்ளன.

சென்னை: மக்களவை தேர்தலில் அதிமுக – திமுக நேரடியாக  8 தொகுதிகளில் போட்டியிட உள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. முன்னதாக, தி.மு.க கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் ஒதுக்கீடு பட்டியலை அறிவித்தது. மேலும் வேட்பாளர்கள் பட்டியலை  இன்று மாலை தி.மு.க தலைவர் முக ஸ்டாலின் வெளியிடவுள்ளார். இதையடுத்து அ.தி.மு.க தங்கள் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் ஒதுக்கீட்டை இன்று வெளியிட்டுள்ளது. அதே போல், டி.டி.வி தினகரனின் அ.ம.மு.கவும்  மக்களவை தேர்தலில் போட்டியிடப் போகும், முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், மக்களவை தேர்தலில் தமிழக திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் நேருக்கு நேர் களம் காண உள்ளன. அவற்றின் விவரம் பின்வருமாறு:-

அ.தி.மு.க – தி.மு.க நேருக்கு நேர் மோதும் 8 தொகுதிகள்!

  • சேலம்
  • நீலகிரி
  • திருவண்ணாமலை
  • பொள்ளாச்சி 
  • மயிலாடுதுறை
  • நெல்லை 
  • தென் சென்னை 
  • காஞ்சிபுரம்

தி.மு.க – பா.ம.க நேருக்கு நேர் மோதும் 6 தொகுதிகள்!

  • ஸ்ரீபெரும்புதூர்
  • அரக்கோணம்
  • திண்டுக்கல் 
  • மத்திய சென்னை 
  • கடலூர் 
  • தருமபுரி 

பா.ஜ.க  காங்கிரஸ் மோதும் தொகுதிகள் 

  • கன்னியாகுமாரி
  • சிவகங்கை

தி.மு.க -பா.ஜ.க  மோதும் தொகுதி

  • தூத்துக்குடி 

பா.ம.க – வி.சி.க மோதும்  தொகுதி 

  • விழுப்புரம்