சுவையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்க்கு பன்னீர் கட்லெட்!

 

சுவையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்க்கு பன்னீர் கட்லெட்!

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெண்ணெயில் துருவிய பன்னீரை போட்டு சிவந்து விடாமல், மணம் வரும் வரை  வதக்கி வைத்துக் கொள்ளவும்

தேவையான பொருட்கள்

துருவிய பன்னீர் – ஒன்றரை கப்
வெங்காயம்  – 1கப் 
குடைமிளகாய் – 1கப்
கரம்மசாலா – 1தேக்கரண்டி
பட்டர் – 1/2தேக்கரண்டி
கார்ன் மாவு – 1டேபிள்ஸ்பூன்
மைதா – 1டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ரவை  – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெண்ணெயில் துருவிய பன்னீரை போட்டு சிவந்து விடாமல், மணம் வரும் வரை  வதக்கி வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயத்தை நன்றாக வதக்கிக் கொள்ளவும். நறுக்கிய குடைமிளகாயை வதக்கிக் கொள்ளவும். அனைத்துப் பொருட்களையும் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இதனை விருப்பமான வடிவில் கட்லட்டுகளாக செய்து ரவையில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து சாஸுடன் பரிமாறவும். மழைக்காலங்களில், மாலை நேரத்துக்கேற்ற சிற்றுண்டியாக இருக்கும்.