சுவாமி அரவிந்தரின் 147ஆவது பிறந்து தினம் இன்று

 

சுவாமி அரவிந்தரின் 147ஆவது பிறந்து தினம் இன்று

உள்ளுணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட இந்த பரிணாம வளர்ச்சியும், அது பிரபஞ்சத்தை தழுவியதாக இருந்தாலும் இந்தியாவிலேயே துவங்கும், அதன் ஆற்றல் மையமாக இந்தியாவே திகழும். இந்தியா விடுதலைப் பெற்ற இந்நாளில் இவைகளையே நான் முன்வைக்கின்றேன்.

சுவாமி அரவிந்தரின் 147வது பிறந்த தினம் இன்று. சுதந்திர தினமான 1947 ஆகஸ்ட் 15ஆம் நாள் அகில இந்திய வானொலியில் சுதந்திரத்தையொட்டி ஒலிபரப்பப்பட்ட அவரின் செய்தியின் பகுதி இங்கே வாசகர்களுக்காக: “இந்தியா தனது ஆன்மீக கொடையை உலகிற்கு வழங்க வேண்டும் என்பது (எனது) மற்றொரு கனவாகும். அதுவும் ஏற்கனவே துவங்கிவிட்டது. முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் ஆன்மீகம் ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் எட்டியுள்ளது. இந்த போக்கு மேலும் வளரும், காலத்தின் பேரழி நர்த்தனங்களையும் தாண்டி ஒரு நம்பிக்கையுடன் மேலும், மேலும் பல கண்கள் இந்தியாவை நோக்கி திரும்பும். அவளிடமுள்ள தத்துவ பெட்டகங்களை நாடி மட்டுமல்ல, அவளுடைய உன்முக, ஆன்மீக பயிற்சியையும் நாடி திரும்பும். தான் சிந்திக்கத் துவங்கிய நாள் முதல் தனிமனித, சமூக முழுமையை நிலைநாட்ட போராடிவரும் மனிதன், தான் எதிர்கொண்டுவரும் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ஆற்றல்தரும் உயர்ந்த, பேருணர்வை நோக்கி அவனுடைய அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி துவங்க வேண்டும் என்பது எனது இறுதிக் கனவாகும்.

Swamy Aravindar

இது ஒரு தனித்த நம்பிக்கையாகவும், கருத்தாகவும் இருந்தாலும், இந்த எண்ணம் இந்தியாவிலும், மேற்கத்திய நாடுகளில் உள்ள முன்னோக்குச் சிந்தனை கொண்ட உள்ளங்களிலும் எழுந்துள்ளது. இதனை சாதிக்கும் பாதையில் வேறு எந்த மாமுயற்சியிலும் இல்லாத அளவிற்கு பெரும் தடைகள் உள்ளன, ஆனாலும் தாண்டுவதற்குத் தானே தடைகள் யாவும்? இறைவனின் சித்தம் துணையிருப்பதால், அந்த தடைகளை தாண்டிவிடலாம். உள்ளுணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட இந்த பரிணாம வளர்ச்சியும், அது பிரபஞ்சத்தை தழுவியதாக இருந்தாலும் இந்தியாவிலேயே துவங்கும், அதன் ஆற்றல் மையமாக இந்தியாவே திகழும். இந்தியா விடுதலைப் பெற்ற இந்நாளில் இவைகளையே நான் முன்வைக்கின்றேன். எனது இந்த எண்ணங்கள் எந்த அளவிற்கு அல்லது எப்படி நிறைவேற்றப்போகிறது என்பது புதிய, சுதந்திர இந்தியாவைப் பொறுத்ததாகும்.