சுவர் இடிந்து விழுந்த விபத்திற்கு நியாயம் கேட்டப் பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி!

சுவர் இடிந்து விழுந்த விபத்திற்கு நியாயம் கேட்டப் பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி!

சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் உடல்களை வாங்க மறுத்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் இருக்கும் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து வரிசையாக நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகியது. இதில், வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.

Protest

இந்நிலையில், அப்பகுதி மக்கள் 17 உயிர்கள் பறிபோனதற்குக் காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அப்பகுதி மக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். தற்போது உயிரிழந்தவர்களின் உடலை வாங்கமறுத்து அவர்களது உறவினர் மருத்துவமனை வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கைகலப்பு ஏற்பட்டதால் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.