சுற்றுச்சூழல் மாசால் வாழ்நாள் குறையாது… மத்திய அமைச்சரின் புது விளக்கம்!

சுற்றுச்சூழல் மாசால் வாழ்நாள் குறையாது… மத்திய அமைச்சரின் புது விளக்கம்!

சுற்றச்சூழல் மாசுக்கும் வாழ்நாள் குறைவதற்கும் எந்த தொடர்பும் இருப்பதாக இந்தியாவில் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்படவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்தார்.

சுற்றச்சூழல் மாசுக்கும் வாழ்நாள் குறைவதற்கும் எந்த தொடர்பும் இருப்பதாக இந்தியாவில் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்படவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்தார். அப்போது, சுற்றசூழல் மாசுக்கும் ஆயுள் குறைவதற்கும் தொடர்பு இல்லை. வீணாக மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஒருவரின் ஆயுள் குறைகிறது என்று இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட எந்த ஆய்வும் கூறவில்லை. 

prakash

மாசு காரணமாக மனிதர்களின் வாழ்நாள் குறைகிறது என்று வெளியான ஆய்வுகள் முதல் தலைமுறை தகவல் அடிப்படையாக இல்லாமல் இருக்கலாம். 
நாடு முழுவதும் தூய்மையான காற்று கிடைக்க தேசிய க்ளீன் ஏர் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 102 சுவாசிக்கும் காற்று மாசு அடைந்த நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு நகரத்துக்கும் அந்த நகரத்துக்கு தேவைக்கு ஏற்ப பிரத்தியேகமாக திட்டம் வடிவமைக்கப்படும்” என்றார்.
காற்று, நீர், நிலம் மாசு காரணமாக பல்வேறு உடல்நலக் குறைவு ஏற்படுவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், அதெல்லாம் நம்ப வேண்டாம், இந்தியாவில் அப்படி எந்த ஒரு ஆய்வு முடிவும் இல்லை என்று மத்திய சுற்றச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரே கூறியிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.