சுர்ஜித்தை மீட்கத் தாமதம் ! மீட்புக் குழு சந்திக்கும் சவால்கள் : வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம்..!

 

சுர்ஜித்தை மீட்கத் தாமதம் ! மீட்புக் குழு சந்திக்கும் சவால்கள் : வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம்..!

நடுக்காட்டுப்பட்டியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சுர்ஜித்தை மீட்பதில் ஏன் தாமதம் ஆகிறது? மீட்புப் பணியில் என்னென்ன சிக்கல்கள் உள்ளது என்பது குறித்த தகவல்களைக் கூறியுள்ளார்.

கடந்த 25 ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித், 63 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் இன்னும் மீட்கப் படவில்லை. மாநில மற்றும் பேரிடர் மீட்புக் குழு இணைந்து இரவு பகலாகச் சிறுவனை மீட்கப் போராடி வருகின்றனர். சுர்ஜித்தை மீட்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் பல தடங்கல்கள், பல சிக்கல்கள். இருப்பினும், மீட்புக் குழு நம்பிக்கையை இழக்காமல், தொய்வின்றி அடுத்த கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏன் இன்னும் அந்த சிறுவனை மீட்க முடியவில்லை? என்ற கருத்து சமூக வலைத்தளங்களில்  பரவலாக எழுந்துள்ளது. 

சுர்ஜித்

நடுக்காட்டுப்பட்டியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சுர்ஜித்தை மீட்பதில் ஏன் தாமதம் ஆகிறது? மீட்புப் பணியில் என்னென்ன சிக்கல்கள் உள்ளது என்பது குறித்த தகவல்களைக் கூறியுள்ளார். அதில். ‘ சுர்ஜித்தை மீட்கும் பணி மழை பாராது, இடைவெளியின்றி நடைபெற்று வருகிறது. டங்ஸ்டன் கார்பைடு உள்ள இயந்திரங்கள் குழி தோண்ட பயன்படுத்தப் பட்டு வருகின்றன. பேரிடர் மீட்புக்கான அனைத்து வல்லுநர் குழுவும் இங்கு உள்ளது. சுர்ஜித் தற்போது 88 அடியில் உள்ளான், அவன் இன்னும் கீழே செல்லாமல் இருக்க ஏர்லாக் மூலம் சுர்ஜித்தின் கை இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ளது. சுர்ஜித்தை மீட்க பலூன் தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தலாம் என்றால், அந்த பலூன் விரிவதற்கு போதுமான இடைவெளி குழிக்குள் இல்லை’ என்று தெரிவித்துள்ளார். 

சுர்ஜித்தை மீட்கத் தாமதம்

அதனைத் தொடர்ந்து, ’98 குழி தோண்டலாம் என்று முடிவு செய்து குழியைத் தோண்ட ஆரம்பித்த பொது இடையே இருந்த பாறைகளால் குழி தூண்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. நவீன இயந்திரங்களைக் கொண்டு பாறையைத் துளைத்தால் சுர்ஜித் உள்ள ஆழ்துளைக் கிணறு நொறுங்கிவிடும். இதுவரை 40 அடிக்குக் குழி தோண்டப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் குழி தோண்டி முடிக்க இன்னும் 12 மணி நேரம் ஆகும்.  இருப்பினும், பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம், உரியப் பாதுகாப்புடன் இந்த பணி தொடர்ந்து நடைபெறும். மேலும், இதற்கான மொத்த செலவுகளையும் தமிழக அரசு ஏற்கும்’ என்று தெரிவித்துள்ளார்.