சுமார் 12 கோடியே 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரீமியம் சந்தாதாரர்களை ஈர்த்த ஸ்பாட்டிஃபை நிறுவனம்

 

சுமார் 12 கோடியே 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரீமியம் சந்தாதாரர்களை ஈர்த்த ஸ்பாட்டிஃபை நிறுவனம்

பிரபல இசை சேவை நிறுவனமான ஸ்பாட்டிஃபை இதுவரை சுமார் 12 கோடியே 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரீமியம் சந்தாதாரர்களை ஈர்த்துள்ளது.

ஸ்டாக்ஹோம்: பிரபல இசை சேவை நிறுவனமான ஸ்பாட்டிஃபை இதுவரை சுமார் 12 கோடியே 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரீமியம் சந்தாதாரர்களை ஈர்த்துள்ளது.

ஸ்வீடன் நாட்டை தலைமையிடமாக கொண்டு பிரபல ஸ்பாட்டிஃபை இசை சேவை நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் ஆப்கள் மூலம் இசையை கேட்டு ரசிக்க முடியும். இதுவரை கூகுள் பிளேஸ்டோரில் மொத்தம் சுமார் 50 கோடிக்கும் அதிகமான டவுன்லோடுகளை ஸ்பாட்டிஃபை ஆப் கடந்துள்ளது. இந்த நிலையில், சுமார் 12 கோடியே 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரீமியம் சந்தாதாரர்களை இந்நிறுவனம் ஈர்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ttn

அதாவது 29 சதவீதம் பிரீமியர் சந்தாதாரர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆப்பிள் மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக ஸ்பாட்டிஃபை நிறுவனம் சந்தையில் சுமார் 35 சதவீதத்தை பிடித்துள்ளது. ஆனால் ஆய்வு மற்றும் மார்கெட்டிங் பணிகளுக்காக இந்நிறுவனம் அதிகளவில் முதலீடு செய்து வருவதால் கடந்தாண்டு 205 மில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளது. 2018-ஆம் ஆண்டில் இது 78 மில்லியன் டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.