சுப்ரீம் கோர்ட்டே எங்களோடது: உத்தரபிரதேச பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு

 

சுப்ரீம் கோர்ட்டே எங்களோடது: உத்தரபிரதேச பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு

லக்னோ: சுப்ரீம் கோர்ட்டே எங்களுடையதுதான் எனவே அயோத்தியில் ராமர் கோயில் நிச்சயமாக கட்டப்படும் என உத்தரபிரதேச மாநில பாஜக அமைச்சர் முகுந்த் பீஹாரி வெர்மா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் இன்னும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை. எனவே ராமர் கோயில் நிலம் தொடர்பாக எந்த அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர். ஆனால் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜக தலைவர்களும், அமைச்சர்களும் தொடர்ந்து ராமர் கோயில் தொடர்பாக கருத்து தெரிவித்து சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.

அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலத்தின் கூட்டுறவுத்துறை அமைச்சர் முகுந்த் பீஹாரி வெர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், உச்ச நீதிமன்றமே எங்களுடையதாக இருக்கும்போது, அயோத்தியில் ராமர் கோயில் உறுதியாகக் கட்டுவோம் எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதேபோல் உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் ப்ரசாத் மெளர்யா,பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட விரும்புகின்றனர் என கடந்த ஆகஸ்ட் மாதம் கருத்து கூறி சர்ச்சையில் சிக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#ramtemple #ayodhyta #uttarpradesh