‘சுபஸ்ரீ மரணத்தில் காற்றின் மீதுதான் வழக்குப் போட வேண்டும்’ : அதிமுக முன்னாள் அமைச்சர் சர்ச்சை பேச்சு!

 

‘சுபஸ்ரீ மரணத்தில் காற்றின் மீதுதான் வழக்குப் போட வேண்டும்’ : அதிமுக முன்னாள் அமைச்சர் சர்ச்சை பேச்சு!

வண்டியில் செல்லும் போது, காற்று வீசியதால் பேனர் விழுந்தது. பேனர் வைத்தவரா அதனை தள்ளிவிட்டுக் கொன்றார்?

பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் காற்றின் மீதுதான் வழக்குப் போட வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். 

கடந்த மாதம் 13 ஆம் தேதி  சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் நிலைதடுமாறி விழுந்தார். அப்போது  அவருக்குப்  பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர சம்பவம் அங்கிருந்தவர்களைப் பதைபதைக்கச் செய்தது. இந்த விவகாரத்திற்குப் பிறகு திமுக, அதிமுக ஆகிய தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளும், நடிகர்களும்   எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தனர்.

modi

இதையடுத்து மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்குப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங் வருகை புரியவுள்ளனர். அவர்களை வரவேற்கும் விதமாக பேனர் வைக்க வேண்டும். அதற்கு அனுமதி தாருங்கள் என்று என்று அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.  மக்களுக்கு இடையூறு இன்றி  பேனர் வைக்கலாம் என்று கூறி  உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். குறிப்பாக அதிமுக அரசுக்கு விளம்பர மோகம் தேவைப்படுகிறது என்று குற்றச்சாட்டினார்.

ponniyan

இந்நிலையில் இதுகுறித்த கருத்து தெரிவித்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல். பேனர் கலாச்சாரத்தைக்  கருணாநிதியும் கடைப்பிடித்து இருக்கிறார். ஸ்டாலினும் கடைப்பிடித்து வருகிறார் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசியுள்ள அவர், பேனர் விழுந்த விவகாரத்தில் ஸ்டாலின் பொய் பேசி மகாகாளி நம்ப வைக்க பார்க்கிறார். வண்டியில் செல்லும் போது, காற்று வீசியதால் பேனர் விழுந்தது. பேனர் வைத்தவரா அதனை தள்ளிவிட்டுக் கொன்றார்? இல்லை. இந்தப் பிரச்சினையில் வழக்குத் தொடுக்க வேண்டும் என்றால், காற்றின் மீதுதான் வழக்குப் போட வேண்டும்’ கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சரின் இந்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.