சுபஸ்ரீ குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி!

 

சுபஸ்ரீ குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி!

சுபஸ்ரீயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவரது பெற்றோருக்கு ஆறுதல்  கூறினார்.

சென்னை : பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து இனி   திமுக, அதிமுக ஆகிய தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளும், நடிகர்களும்   எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

stalin

இந்நிலையில்  சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் இல்லத்திற்கு இன்று திமுக தலைவர்  ஸ்டாலின் சென்றார். சுபஸ்ரீயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவரது பெற்றோருக்கு ஆறுதல்  கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறோம். சுபஸ்ரீயின் தந்தை என்னிடம், பேனரால் ஏற்பட்ட உயிரிழப்பு இதுவே கடைசியாக இருக்க வேண்டும். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றார். இதை என்னால் மறக்க முடியாது. பேனர் மரணம் குறித்துக் கேள்விப்பட்டதும், நாங்களே முன்வந்து திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தோம். அதில், நாங்கள் சட்டத்தை மீறி அனுமதி இல்லாமல் எங்கும் பேனர் வைக்கமாட்டோம் என்று கூறி உள்ளோம்’ என்றார். 

stalin

தொடர்ந்து பேசிய அவர்,  என்னைப் பொருத்தவரை பேனர் கலாச்சாரம் இருக்கக்கூடாது என்பதுதான் என் கருத்து.சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு திமுக அறக்கட்டளை சார்பில் 5 லட்சம் ரூபாய்  வழங்கப்படும். இது அவரது குடும்பத்துக்கு ஆறுதலை அளிக்காது. இருப்பினும் அவர்களுக்கு எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். பேனர் வைத்த குற்றவாளியை அரசு நினைத்தால் பிடித்திருக்க முடியும், ஆனால்  இந்த விவகாரத்தில் அரசு நாடகம் ஆடுகிறது’ என்றார்.