சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான ஜெயகோபால் வெளிநாட்டிற்கு தப்பி விட்டாரா?: உயர் நீதி மன்றம் கேள்வி..

 

சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான ஜெயகோபால் வெளிநாட்டிற்கு தப்பி விட்டாரா?: உயர் நீதி மன்றம் கேள்வி..

சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான ஜெயகோபாலை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?, அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடி விட்டாரா? லாரி ஓட்டுநர் மீது போடப் பட்ட அதே வழக்கு ஜெயகோபால் மீது போடப் பட்டது ஏன்? என காவல்துறைக்கு சரமாரியான கேள்விகளை முன் வைத்தது உயர் நீதி மன்றம். 

சென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் தவறி விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், வழக்கு பதிவு செய்து சென்னை பரங்கி மலை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

Subasree

இந்த வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் தலைமறைவாகியுள்ளதால்  இன்னும் காவல்துறை கைது செய்யவில்லை. காவல்துறை அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவர் உறவினர்களின் தொலைபேசி எண்ணை பின்பற்றி வருவதாகவும் தெரிவித்தனர். 

இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான ஜெயகோபாலை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?, அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடி விட்டாரா? லாரி ஓட்டுநர் மீது போடப் பட்ட அதே வழக்கு ஜெயகோபால் மீது போடப் பட்டது ஏன்? என காவல்துறைக்கு சரமாரியான கேள்விகளை முன் வைத்தது உயர் நீதி மன்றம். 

மேலும், எதிர் தரப்பில் வாதாடிய தி.மு.கவின் மூத்த வழக்கறிஞர், இதுவரை ஜெயகோபாலை கைது செய்யாததால் இந்த வழக்கை  சிபிசிஐடி க்கு மாற்ற வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.