சுட சுட பிரியாணி; பொழுதுபோக்குக்கு டி.வி.,: புழல் சிறையில் கைதிகள் ஜமாய்-வீடியோ

 

சுட சுட பிரியாணி; பொழுதுபோக்குக்கு டி.வி.,: புழல் சிறையில் கைதிகள் ஜமாய்-வீடியோ

புழல் சிறையின் கைதிகள் அறையில் பிரியாணி தயாராகும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை: புழல் சிறையின் கைதிகள் அறையில் பிரியாணி தயாராகும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே உள்ள புழல் சிறையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு, பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய கைதிகள் உள்ளிட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக புகைப்படங்கள் சமீபத்தில் அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்த புகாரின் பேரில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த சிறை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், புழல் சிறையின் கைதிகள் அறையில் பிரியாணி தயாராகும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ மூலம் கைதிகள் அறையில் தொலைக்காட்சி, டைனிங் டேபிள் உள்ளிட்ட வசதிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.