சுட்டெரிக்கும் சூரியன்! ரோட்டிலேயே ஆப் பாயில் செய்த பெண்! வைரலாகும் வீடியோ!

சுட்டெரிக்கும் சூரியன்! ரோட்டிலேயே ஆப் பாயில் செய்த பெண்! வைரலாகும் வீடியோ!

தற்போது குளிர்காலம் நிலவி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் மட்டும் பயங்கர வெயில் கொளுத்தி வருகிறது இதனால் அங்கு பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.வெயிலின் தாக்கம் இந்த வருடம் எப்போதுமில்லாத அளவு அதிகரித்து காணப்படுகிறது.சாலைகளும் உருகிவிடும் நிலையில் வெயிலின் தாக்கம் படு அகோரமாக உள்ளது. 

இதனால் ஆஸ்திரேலியர்கள் தங்கள் உணவுகளை சாலைகளிலேயே சமைத்து உண்ணுகிறார்கள். மீடியா சேகரித்த தகவலின் படி ஆஸ்திரேலியாவின் நேற்றைய வெப்பநிலை 40 டிகிரிக்கும் அதிகமாக உள்ளது. மேலும் மக்கள் இதுவரை இப்படியொரு வெப்பத்தை எதிர்கொண்டதில்லை என்று சொல்கிறார்கள்.

மேலும் அங்கு மெல்போர்னில்  கசான்ட்ரா அஸீஸ் என்ற பெண் சாலையின் ஓரத்தில் ஆம்லெட் போட்டிருக்கிறார்! இதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால் பொதுவாக முட்டை 70 டிகிரிக்கும் கீழ் இருந்தால் முட்டை வேகாது. ஆனால் ஆஸ்திரேலியாவில் வானிலைகளை சாலைகளில் கொஞ்ச நேரம் வைத்தாலே இதுபோன்று சமைக்க முடிகிறது  என்று கூறுகின்றனர். 

மேலும், இதே போன்று ஒரு நபர் தன் காரிலேயே பன்றிக்கறி சமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது! இதுமட்டுமன்றி தெற்கு ஆஸ்திரேலியாவில் போர்ட் அகஸ்டா என்ற சிறிய நகரத்தில் சாலைகள் உருகி இருப்பதும் தெரியவந்துள்ளது! ஆஸ்திரேலியாவில் இந்த அளவுக்கு வெப்பம் வாட்டிவதைக்கிறது! நம்ம ஊராக இருந்தால் கேஸ் சிலிண்டருக்கு ஆகுற செலவு மிச்சம் என்று சந்தோசப்பட்டிருப்போம். எப்பவுமே குளிரில் இருந்து பழக்கப்பட்ட ஆஸ்திரலேயே மக்களுக்கு இது கொடுமையான காலம்தான்!