சுடச் சுட இட்லி… சூடான குடல் குழம்பு.. முப்பது வருடமாய் மும்முரமான விற்பனை

 

சுடச் சுட இட்லி… சூடான குடல் குழம்பு.. முப்பது வருடமாய் மும்முரமான விற்பனை

ஈரோட்டில் இருந்து கோவை போகும்போது அவிநாசி பைபாசில் தண்ணீர் பந்தல் பாளையம் வருகிறது.அங்கிருந்து இரண்டு கி.மீ தூரத்தில் இருக்கிறது பெரியாயி பாளையம்,அங்கே தான் இந்த ஓலைக் கடை இருக்கிறது. அந்த ஓலைக்கடை குடல் கறியும் இட்ட்லியும் முப்பது வருடமாக மும்முரமாக விற்கிறது.

ஈரோட்டில் இருந்து கோவை போகும்போது அவிநாசி பைபாசில் தண்ணீர் பந்தல் பாளையம் வருகிறது.அங்கிருந்து இரண்டு கி.மீ தூரத்தில் இருக்கிறது பெரியாயி பாளையம்,அங்கே தான் இந்த ஓலைக் கடை இருக்கிறது. அந்த ஓலைக்கடை குடல் கறியும் இட்லியும் முப்பது வருடமாக மும்முரமாக விற்கிறது.

hotel

ரத்தினசாமி என்கிற பெரியவர்தான் இந்த கடையை முப்பது வருடம் முன்பு துவங்கியவர்.அன்று முதல் இன்று வரை அதே மெனுதான்.இட்லி,தோசை,குடல் குழம்பு , மட்டன் குழம்பு,நாட்டுக்கோழி குழம்பு.அவ்வளவுதான்.ஆனால் ரத்தினசாமி தரும் சுவையில் இந்த வட்டாரமே மயங்கிக் கிடக்கிறது.
எந்த பிராண்டட் மசாலாவையும் வாங்குவதோ,பயன்படுத்துவதோ கிடையாது.எல்லாமே அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கைமனம்தான்.

idly

இட்லி ஒரு பக்கம் அவித்துக் காட்டப்படுகிறது. நாட்டுக்கோழி குழம்பும்,மட்டன் குழம்பும் கொதித்துக் கொண்டு இருக்கின்றன.ஆனால்,வரும் கஸ்டமர்களில் மூவரில் இருவர்  குடல் கறியைத்தான் கேட்கிறார்கள்.

food

காலையிலேயே கஸ்டமர்களுக்காக ரத்தினசாமியும்,ரத்தினசாமிக்காக வாசிக்கையாளர்களும் தயார் ஆகி விடுவதால் இந்த ஆரோக்கியமான போட்டி முப்பது வருடமாக, முற்றுப்புள்ளி இல்லாமல் தொடர்கிறது.ரத்தினசாமியும் தன் வாடிக்கையாளர்களுக்கு தரமான ,சுவையான உணவைத்தான் தரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்குறார்.வாடிக்கையாளர்களும் அவரை முப்பதாண்டுகளாக கைவிடாமல் தொடர்கிறார்கள்.விலையும் பொதுவாக கொங்கு நாட்டில் விற்கப்படும் விலைதான்.

food

போட்டி என்கிற குடல்க்கறி 100 ரூபாய்.நாட்டுக்கோழி, மற்றும் மட்டன் குழம்பு என்றால் 150 ரூபாய்.ஐந்தே ஐட்டங்களில் , இன்றும் கூரைக்குள்ளேயே நடக்கும் இந்த கூரைக்கடை அவசியம் ஒரு முறை நுழைந்து பார்க்கவேண்டிய கடைதான்.