சுங்கச்சாவடிகளில் கட்டாய பாஸ்ட் டேக் வசதியை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

சுங்கச்சாவடிகளில் கட்டாய பாஸ்ட் டேக் வசதியை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

சுங்கச்சாவடிகளில் கட்டாய பாஸ்ட் டேக் வசதியை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

சுங்கச்சாவடிகளில் கட்டாய பாஸ்ட் டேக் வசதியை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

சுங்கச்சாவடிகளில் தானியங்கி சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பாஸ்ட் டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் வாகன ஓட்டிகள் டிஜிட்டல் முறையில் சுங்கக் கட்டணத்தை செலுத்த முடியும். இதனால் வாகனங்கள் நிற்கும் நேரம் குறையும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருந்தது. அதுமட்டுமின்றி இனி சுங்கக் கட்டணத்தை ரொக்கமாக செலுத்தி செல்லும் வாகனங்களுக்கு ஒரு வழியும், மற்ற அனைத்து வழிகளும் பாஸ்ட் டேக் பயன்பாட்டாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

பாஸ்ட் டேக்

இந்நிலையில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த இருந்த பாஸ்ட் டேக் சேவை தற்போது டிசம்பர் 15 ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.