சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் புகார்!

 

சீமான் மீது  நடிகை விஜயலட்சுமி பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் புகார்!

இதை தொடர்ந்து சீமான் குறித்து பல வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டுப் பரபரப்பை கிளம்பினார்.

நாம் தமிழர் கட்சியினர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை விஜயலட்சுமி பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார்  கொடுத்துள்ளார். 

தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த பிரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இதையடுத்து ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன், மிசைய முறுக்கு போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.

 

இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் சரிவர இல்லாததால் சின்னதிரையில் நடித்து வந்தார். இவர் சீமான் இயக்கிய ‘வாழ்த்துகள்’ படத்திலும் நடித்தார். அப்போது சீமான் தன்னை 3 ஆண்டுகளாக காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக கூறிய விஜயலட்சுமி அவருடன் பிறந்தநாள் கொண்டாடும் போட்டோ, வீடியோக்களை வெளியிட்டார்.

 

சமீபத்தில் தஞ்சை பெரியகோவிலில் சாமி தரிசனம் செய்த சீமான், சிவபக்தர்களான என்னையும் என் தாயையும் கிண்டல் செய்துவிட்டு, இப்போது நெற்றியில் விபூதி பட்டை பூசி தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்றிருப்பது எந்த வகையில் சரி? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதை தொடர்ந்து சீமான் குறித்து பல வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டுப் பரபரப்பை கிளம்பினார். 

ttn

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி நேற்று தனது  சகோதரியுடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.  அதில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சி கூட்டங்களில் என்னை குறித்து அவதூறாகப் பேசி  வருகிறார்கள்.  இதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே சீமான் மற்றும சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.